Advertisement

மகாராஷ்டிராவில் கொரோனாவால் 1,809 போலீசாருக்கு பாதிப்பு

By: Nagaraj Mon, 25 May 2020 6:34:41 PM

மகாராஷ்டிராவில் கொரோனாவால் 1,809 போலீசாருக்கு பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் மேலும் 51 காவலர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், இந்தியாவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. இதில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.


guards,doctors,cleaners,corona ,காவலர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், கொரோனா

இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் இன்று மேலும் 51 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 1,809 ஆக உயர்ந்துள்ளது. இதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 678 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவலின்படி, மகாராஷ்டிரத்தில் இதுவரை 50,231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 678 பேர் நோயிலிருந்து மீண்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் தொற்றுக்கு 1,635 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|