Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறவுள்ள நிலையில், 18,500 போலீசார் பாதுகாப்பு பணி

சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறவுள்ள நிலையில், 18,500 போலீசார் பாதுகாப்பு பணி

By: vaithegi Sun, 24 Sept 2023 09:57:57 AM

சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறவுள்ள நிலையில், 18,500 போலீசார் பாதுகாப்பு பணி

சென்னை: விநாயகர் சதுர்த்தியை ஓட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளிலுமிந்துக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். சென்னை பெருநகர காவல் துறைக்கு உள்பட்ட பகுதிகளில் 1,343 விநாயகா் சிலைகளும், தாம்பரம் மாநகர காவல் துறைக்கு உள்பட்ட பகுதியில் 693 விநாயகா் சிலைகளும் வைத்து வழிபாடு செய்யப்பட்டன.

இதையடுத்து அவ்வாறு பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்படும் சிலைகள் கடலில் கரைக்கப்படுவது வழக்கமான ஒன்று. சென்னையில் வைக்கப்பட்ட சிலைகளை பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு துறைமுகம், திருவொற்றியூர் போன்ற இடங்களில் கரைக்கலாம் என்று மாநகர காவல்துறை தெரிவித்து உள்ளது.

police,ganesha idols,procession ,போலீசார் ,விநாயகர் சிலைகள்,ஊர்வலம்

இந்த நிலையில், சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறவுள்ள நிலையில், ஊர்வலங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமலிருப்பதற்காக 18,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விநாயகர் சிலைகளை கரைக்கும் போது யாரும் தண்ணீரிலிழுத்துச் செல்லாமல் இருப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Tags :
|