Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கராச்சி சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்

கராச்சி சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்

By: Nagaraj Sun, 14 May 2023 10:39:46 PM

கராச்சி சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்

கராச்சி: இந்திய மீனவர்கள் விடுதலை... பாகிஸ்தானின் கராச்சி சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக சர்வதேச எல்லையைக் கடக்கும் மீனவர்கள் அந்தந்த நாடுகளின் கடற்படையால் கைது செய்யப் பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அரபிக் கடலில் எல்லை தாண்டி பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக இந்திய மீனவர்கள் பலர் கைது செய்யப் பட்டுள்ளனர். அரபிக் கடலில் கடல்சார் சர்வ தேச எல்லையை கடக்கும் மீனவர்கள் மீது அந்தந்த நாடுகளின் பாஸ்போர்டு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு சுமார் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.

கடல் எல்லையை கடக்கும் போது பாகிஸ்தான் அதிகாரிகள் அவர்களை கைது செய்வதுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர்.

wagah border,fishermen,surrender,karachi,officials ,வாகா எல்லை, மீனவர்கள், ஒப்படைப்பு, கராச்சி, அதிகாரிகள்

அவ்வாறு 651 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டின் கராச்சி சிறையில் தற்போது அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதில் 631 மீனவர்களின் தண்டனை காலம் முடிந்து நாடு திரும்புவதற்காக காத்திருக்கின்றனர். பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் சமீபத்தில் மரணமடைந்துள்ளார். இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் கராச்சி சிறையில் இருந்த இந்திய மீனவர் ஒருவர் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, வரும் 12-ம் தேதி 198 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப் பட உள்ளதாக அந்நாட்டின் அரசாங்கம் கூறியிருந்தது.

இந்நிலையில், கராச்சி சிறையில் இருந்து நேற்று 198 இந்திய மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப் பட்டனர். அவர்கள் முதலில் லாகூருக்கு அனுப்பப்பட்டனர். அதன்பின் வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags :