Advertisement

மயிலாடுதுறையில் வரும் நவ.19 ம் தேதி உள்ளூர் விடுமுறை

By: vaithegi Fri, 03 Nov 2023 11:42:38 AM

மயிலாடுதுறையில் வரும் நவ.19 ம் தேதி உள்ளூர் விடுமுறை

மயிலாடுதுறை : கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு வரும் நவ.15 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை ... மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள காவிரி துலா கட்டத்தில் ஆண்டுதோறும் கடைமுக தீர்த்தவாரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த காவிரி நதியில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்து புனித நீராடுவார்கள். இவ்விழாவானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

mayiladuthurai,local holiday ,மயிலாடுதுறை,உள்ளூர் விடுமுறை

அதில் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி நிகழ்வு நடப்பு ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து கொண்டு வருகிறது.

எனவே இந்த விழாவை முன்னிட்டு பொது மக்கள் வழிபடும் வகையில் இன்றைய தினம் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :