Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் மோடி ரூ.2.25 லட்சம் பி.எம். கேர்ஸ்க்கு வழங்கியதாக பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

பிரதமர் மோடி ரூ.2.25 லட்சம் பி.எம். கேர்ஸ்க்கு வழங்கியதாக பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

By: Karunakaran Thu, 03 Sept 2020 9:56:59 PM

பிரதமர் மோடி ரூ.2.25 லட்சம் பி.எம். கேர்ஸ்க்கு வழங்கியதாக பிரதமர் அலுவலகம் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் நாட்டில் தீவிரமாகப் பரவத் தொடங்கியபோது பிரதம அமைச்சரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிதி (பிஎம் கேர்ஸ்) அறக்கட்டளையை பிரதமர் மோடி கடந்த மார்ச் 27-ம் தேதி உருவாக்கினார். இதில் யார் வேண்டுமானாலும் தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்கலாம்.

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மட்டுமின்றி மக்களும் பலர் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்தனர். கொரோனா காரணமாக பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான நிதியுதவி செய்ய இந்த பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இதில் பிரதமர் மோடி தலைவராகவும், பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித் ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

pm modi,prime minister office,pmcares,fund ,பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம், பி.எம்.கேர்ஸ், நிதி

இந்த பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையின் முதல் 5 நாட்களில் 3,076 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இதன் நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிடப்படவில்லை. இதனால் நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தி வருகிறது.

தற்போது, பிரதமர் மோடி தனது சொந்த வருமானத்தில் இருந்து ரூ.2.25 லட்சத்தை பி.எம்.கேர்ஸ் நிதித்திட்டத்திற்கு நன்கொடை அளித்துள்ளார் என பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும் மற்ற நன்கொடையாளர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

Tags :