அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கியதாக கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
By: Nagaraj Wed, 19 July 2023 5:01:53 PM
நன்னிலம்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது... திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கியதாக கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நன்னிலத்தில் இருந்து அதம்பார் வழியாக சற்குணேஷ்வரம் சென்ற பேருந்தை 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் வழிமறித்ததாக கூறப்படுகிறது.
தங்களுக்கு ஏன் வழிவிடவில்லையென அவர்கள் கேட்டதாகவும், குறுகிய சாலையாக இருந்ததால் வழிகொடுக்க முடியவில்லை என்று ஓட்டுநர் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட வாய்த் தகராறில், மாணவர் ஒருவர் பேருந்தில் ஏறி ஓட்டுநரின் சட்டையைப் பிடித்து தாக்க முயன்றதாகவும், இதனை செல்போனில் வீடியோ எடுத்த நடத்துநர் மற்றும் பெண் பயணிகளை அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. 2 பேரை கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.