Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீட்சிதர்கள் 2 பேருக்கு கொரோனா; சிதம்பரம் கோயில் தேர்திருவிழா ரத்து

தீட்சிதர்கள் 2 பேருக்கு கொரோனா; சிதம்பரம் கோயில் தேர்திருவிழா ரத்து

By: Nagaraj Sat, 27 June 2020 7:44:01 PM

தீட்சிதர்கள் 2 பேருக்கு கொரோனா; சிதம்பரம் கோயில் தேர்திருவிழா ரத்து

தமிழகம் முழுவது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில் தீட்சிதர்கள் இருவருக்கு கொரோனா உறுதியானது.

இதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேர்த் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. உலக புகழ் பெற்ற நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சனம் விழா கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

dikshitas,corona,impact,natarajar temple,cancellation ,தீட்சிதர்கள், கொரோனா, பாதிப்பு, நடராஜர் கோயில், ரத்து

ஆனால் இதில் பொதுமக்கள் பிரபலங்கள், அதிகாரிகள் யாருக்கும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. குறிப்பிட்ட அளவில் மட்டுமே கோயில் தீட்சிதர்கள் அனுமதிக்கப்பட்டனர். 4 வாயில்களில் 3 வாயில்கள் அடைக்கப்பட்டு ஒரு வாயில் மட்டும் திறக்கப்பட்டு அதிகளவு போலீஸ் குவிக்கப்பட்டு தீட்சிதர்கள் மட்டும் விழாவுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

நாளை தேர் திருவிழா நடைபெறவிருந்த நிலையில் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவுள்ள தீட்சிதர்களுக்கு நேற்று முன்தினம் ஆர் டி பி சி ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 2 தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டது .

இத்தகவல் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த தீட்சதர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags :
|
|