Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்

By: Karunakaran Thu, 17 Sept 2020 10:36:50 AM

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 2 கோடி 17 லட்சம் பேர் குணம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியிருப்பினும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் இறுதி கட்ட முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர். தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடி 17 லட்சத்தை கடந்துள்ளது.

corona infection,world,corona virus,corona death ,கொரோனா தொற்று, உலகம், கொரோனா வைரஸ், கொரோனா மரணம்

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 25 ஆயிரத்து 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 2 கோடியே 17 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 44 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2 கோடியே 17 லட்சத்து 79 ஆயிரத்து 702 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் 41,08,179 பேரும், இந்தியாவில் 39,42,361 பேரும், பிரேசிலில் 37,20,312 பேரும் குணமடைந்துள்ளனர்.

Tags :
|