Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்களில் திருத்தம் செய்துகொள்ள 2 நாட்கள் கூடுதல் அவகாசம்

ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்களில் திருத்தம் செய்துகொள்ள 2 நாட்கள் கூடுதல் அவகாசம்

By: vaithegi Mon, 01 Aug 2022 3:35:11 PM

ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்களில் திருத்தம் செய்துகொள்ள  2 நாட்கள் கூடுதல் அவகாசம்

தமிழகம் : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பு தொடர நினைக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் குறிப்பாக மாணவிகளின் இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும், அரசு பள்ளிகளில் மாணவிகளின் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் தான் அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கு இடையே, மாணவிகள் விண்ணப்பிக்க ஜூலை 10 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஜூலை 18 ஆம் தேதி வரைக்கும் ரூ. 1000 நிதியுதவி பெறும் திட்டத்திற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

applications,funding,amendment ,விண்ணப்பங்கள்,நிதியுதவி ,திருத்தம்

இதனால் கிட்டத்தட்ட 3.58 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ளனர். இந்த கல்வியாண்டு முதலே மாணவிகளின் வங்கி கணக்கிற்கே ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலும் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்களை திருத்தம் செய்துகொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்களில் திருத்தம் செய்துகொள்ள நினைப்பவர்களுக்காக 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்களுக்கான ஒப்புதல் திருத்தங்களை செய்ய கல்லூரி முதல்வர்களுக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Tags :