Advertisement

தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை பெய்யக்கூடுமாம்

By: vaithegi Thu, 26 Oct 2023 10:43:37 AM

தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை பெய்யக்கூடுமாம்

சென்னை: இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு ..தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று : தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

29.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

heavy rains,tamil nadu,puducherry and karaikal ,கனமழை ,தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்


இதனை அடுத்து மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு, கேரளாவில் அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் கனமழைக்கும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :