Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போதை பொருளுடன் ஊடுருவிய 2 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

போதை பொருளுடன் ஊடுருவிய 2 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

By: Nagaraj Sun, 28 May 2023 7:22:19 PM

போதை பொருளுடன் ஊடுருவிய 2 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

பஞ்சாப்: ஊடுருவிய ட்ரோன் வீழ்த்தப்பட்டது... பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய 2 டிரோன்கள் எல்லை பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன.

குர்ட் மாவட்டம் தனோவா கிராமத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் நேற்றிரவு ஆளில்லா டிரோன் பறப்பதை கண்டுபிடித்து எல்லை பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.

drone,shot down,heroin,security forces,border ,ட்ரோன், சுட்டு வீழ்த்தினர், ஹெராயின், பாதுகாப்பு படை, எல்லை

இதில் நொறுங்கி விழுந்த டிரோனை எடுக்க பாதுகாப்புப் படையினர் சென்றபோது, அங்கிருந்து 3 பேர் ஓடுவதை பார்த்து விரட்டிச் சென்று ஒருவனை மடக்கி பிடித்தனர்.

அவனிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புடைய மூன்றரை கிலோ ஹெராயினை கைப்பற்றினர். இதேபோல், மேலும் ஒரு டிரோனை சுட்டுவீழ்த்தி அதிலிருந்த சுமார் 2 கிலோ ஹெராயினை கைப்பற்றினர்.

Tags :
|
|