Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2 மின் விளக்கு, ஒரு தொலைக்காட்சிக்கு வந்த மின் கட்டணம் ரூ.11,359

2 மின் விளக்கு, ஒரு தொலைக்காட்சிக்கு வந்த மின் கட்டணம் ரூ.11,359

By: Nagaraj Tue, 16 June 2020 7:00:36 PM

2 மின் விளக்கு, ஒரு தொலைக்காட்சிக்கு வந்த மின் கட்டணம் ரூ.11,359

2 மின் விளக்கு, ஒரு டிவி இதற்கான மின் கட்டணம் ரூ.11,359... கேரளா மாநிலத்தில், ஏலக்காய் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளிக்கு இரண்டு மின் விளக்குகள், ஒரு டிவி பயன்பாட்டுக்கு ரூ.11,359 பில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளா மாநிலம், ராஜக்கோட் பகுதியில் உள்ள சிறு வீட்டில் வசிப்பவர் ராஜாம்மா. ஏலக்காய் தோட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் இரண்டு மின் விளக்குகள், ஒரு டிவி மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இவர் வழக்கமாக ரூ.200 - ரூ 300 மட்டுமே செலுத்துவது வழக்கம்.

shock,electricity,explanation,kerala,problem ,அதிர்ச்சி, மின் கட்டணம், விளக்கம், கேரளா, பிரச்னை

கடந்த மாதத்தில் ரூ.292 மின் கட்டணமாகச் செலுத்தியிருக்கிறார். இந்த நிலையில் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 40 மடங்கு அதிகரித்து ரூ.11359 க்கு வந்திருந்த கரண்ட் பில்லைப் பார்த்த ராஜாம்மா அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.

அந்த பில்லில் ரூ.5601 மட்டும் டோர் லாக் (DL ) அட்ஜஸ்ட்மென்ட் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. டோர் லாக் (DL ) அட்ஜஸ்ட்மென்ட் கடந்த நான்கு மாத பயன்பாட்டில் பாதி அளவு கணக்கிடப்படுவதாகக் கேரளா மின்வாரியம் தெரிவித்திருக்கிறது.

shock,electricity,explanation,kerala,problem ,அதிர்ச்சி, மின் கட்டணம், விளக்கம், கேரளா, பிரச்னை

இதுகுறித்து கருத்து கூறியிருக்கும் கேரளா மின்வாரியம், "மின் இணைப்பில் உள்ள பிரச்னையால் ஏற்பட்ட மின் இழப்பால் தான் மின் பயன்பாட்டுக் கட்டணம் அதிகமாகியிருக்கிறது. அருகில் உள்ள வீடுகளிலும் இதே மாதிரியான புகார்கள் வந்திருக்கின்றன. விசாரித்து வருகிறோம். மீட்டர் பாக்சில் ஏற்பட்ட பிரச்னை மற்றும் ரீடிங் அட்ஜஸ்ட்மென்டில் ஏற்பட்ட பிரச்னையால் திடீரென்று மின் கட்டணம் அதிகமாகியிருக்கிறது.

ஏப்ரல் மாதத்தில், கொரோனா ஊரடங்கு பிரச்னையால் மின் கட்டணம் அளவீடு செய்யாததால் இந்த அட்ஜஸ்ட்மென்ட் செய்யப்படுகிறது. அடுத்தடுத்த மாதங்களில் வரும் மின் கட்டணங்களில் அதிகப்படியான மின் பயன்பாட்டுத் தொகை சரி செய்யப்படும்" என்று இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறது.

Tags :
|
|