Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இத்தாலியில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 763 பேர் கொரோனாவால் பாதிப்பு

இத்தாலியில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 763 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Monisha Thu, 11 June 2020 6:10:42 PM

இத்தாலியில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 763 பேர் கொரோனாவால் பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 74.46 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இத்தாலியில் கொரோனா பலி எண்ணிக்கை 34 ஆயிரத்து 114 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து இத்தாலி சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:-

இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் 71 பேர் கொரோனாவுக்குப் பலியாகினர். இதனைத் தொடர்ந்து இத்தாலியில் கொரோனா பலி எண்ணிக்கை 34 ஆயிரத்து 114 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் இதுவரை 2 லட்சத்து 35 ஆயிரத்து 763 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona virus,italy,corona kills,international travel,vulnerability ,கொரோனா வைரஸ்,இத்தாலி,கொரோனா பலி,சர்வதேசப் பயணம்,பாதிப்பு

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1,293 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை இத்தாலியில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 939 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இத்தாலியில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் சர்வதேசப் பயணத்தை ஜூன் 3-ம் தேதி முதல் இத்தாலி அனுமதித்தது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாக சில நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

Tags :
|