Advertisement

வாட்ஸ்அப்பின் 2 புதிய அப்டேட்

By: vaithegi Wed, 08 Feb 2023 1:57:19 PM

வாட்ஸ்அப்பின் 2 புதிய அப்டேட்

இந்தியா: உலகளவில் அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது பயனர்களை கவரும் வகையில் சில அப்டேட்களை வெளியிட்டு கொண்டு வருகிறது. இந்த அப்டேட்கள் அனைத்தும் வாடிக்கையாளர்ளுக்கு ஏதோவொரு வகையில் பயனுள்ளதாக இருக்கிறது.

இந்த நிலையில், மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம், மீண்டும் 2 புதிய அப்டேட்களை வெளியிட இருப்பதாக அறிக்கைகள் கிடைத்துள்ளது.

update,whatsapp ,அப்டேட்  ,வாட்ஸ்அப்

எனவே அதன்படி, ஒரே நேரத்தில் 100 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய இருப்பதாக வெளியாகியுள்ளது. தற்போது வரை வாட்ஸ்அப் மூலம் 30 புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை மட்டும் ஷேர் செய்ய முடியும்.

அதே போன்று வாட்ஸ்அப் செயலி முதல்முறையாக வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டோரியாக வைக்கவும் பயனர்களை அனுமதிக்க இருக்கிறது. இதையடுத்து இந்த புதிய அப்டேட் விரைவில் அனைத்து பயனர்களுக்கு கிடைக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|