Advertisement

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 2 பேர் உயிரிழப்பு

By: vaithegi Wed, 13 Sept 2023 10:30:18 AM

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 2 பேர் உயிரிழப்பு

கேரளா: கடந்த 1998-ம் ஆண்டில் மலேசியாவில் முதல்முறையாக நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. இதினையடுத்து இது பெரும்பாலும் பழந்தின்னி வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்தும் மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது.

கடந்த 2018-ல் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் நிபா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. அப்போது 17 பேர் வைரஸால் உயிரிழந்தனர்.அதன் பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு கொச்சியிலும் கடந்த 2021-ம் ஆண்டில் கோழிக்கோட்டிலும் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது.

kerala,nipah virus,death ,கேரளா,நிபா வைரஸ் ,உயிரிழப்பு

இந்த சூழலில் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகடந்த ஆக. 30-ல் உயிரிழந்தார்.அதே மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் மற்றொரு நோயாளி உயிரிழந்தனர்.

இதையடுத்து அவர்களின் மாதிரிகள் மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. இதில் இருவரும் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறும்போது, “கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேர் நிபா வைரஸால் உயிரிழந்துள்ளனர். அந்த மாநிலத்துக்கு மத்திய சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு குழு அனுப்பப்பட்டுவுள்ளது. குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவ நிபுணர்கள், மாநில அரசுக்குதேவையான அறிவுரைகளை வழங்குவர்" என்று அவர் தெரிவித்தார்.

Tags :
|