Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கரீபியன் கடலில் மேலும் தங்க புதையலுடன் மூழ்கி கிடக்கும் 2 கப்பல்கள்… ஸ்பெயின் அரசு வெளியீடு

கரீபியன் கடலில் மேலும் தங்க புதையலுடன் மூழ்கி கிடக்கும் 2 கப்பல்கள்… ஸ்பெயின் அரசு வெளியீடு

By: vaithegi Sat, 11 June 2022 8:24:10 PM

கரீபியன் கடலில் மேலும் தங்க புதையலுடன் மூழ்கி கிடக்கும் 2 கப்பல்கள்… ஸ்பெயின் அரசு வெளியீடு

கொலம்பியா நாட்டுக்கு அருகே கரீபியன் கடல் பகுதியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சான்ஜோஸ் கப்பல் 600 பேருடன் மூழ்கியது. அதில் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கம் இருந்தது. 1708-ம் ஆண்டு ஜூன் மாதம் கொலம்பிய தலைநகர் போகோட்டோ அருகே சான்ஜோஸ் கப்பல் கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சான்ஜோஸ் கப்பலுக்கு அருகே மேலும் இரண்டு கப்பல்கள் மூழ்கி இருப்பதாக ஸ்பெயின் அரசு வெளியிட்டுள்ளது. ரிடியோலில் சான்ஜோஸ் கப்பலுக்கு அருகே 2 கப்பல்கள் மூழ்கி கிடக்கின்றன.

நீலம், பச்சை நிறங்களில் கடலின் அடியில் தங்க நாணயங்கள், மண்பாண்டங்கள், பீங்கான் கோப்பைகள், பீரங்கியும் கடலின் அடிப்பரப்பில் கிடக்கிறது. இது தொடர்பாக ஸ்பெயின் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

Tags :
|