Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆகஸ்டு 10-ந் தேதிக்குள் 20 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கும் - ராகுல் காந்தி

ஆகஸ்டு 10-ந் தேதிக்குள் 20 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கும் - ராகுல் காந்தி

By: Karunakaran Sat, 18 July 2020 11:05:35 AM

ஆகஸ்டு 10-ந் தேதிக்குள் 20 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கும் - ராகுல் காந்தி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இதே வேகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அமைந்தால், ஆகஸ்டு மாதம் 10-ந் தேதிக்குள் நாட்டில் 20 லட்சம் பேருக்கு தொற்று பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

rahul gandhi,india,coronavirus,corona prevalence ,ராகுல் காந்தி, இந்தியா, கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு

இதுகுறித்து அவர், நேற்று கொரோனா வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி விட்டது. இதே வேகத்தில் பரவினால் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதிக்குள் நாட்டில் 20 லட்சம் பேருக்கு தொற்று பாதிக்கும். கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசு உறுதியான, திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், இந்த வாரம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை கடக்கும் என்று கடந்த 14-ந் தேதி வெளியிட்ட டுவிட்டர் பதிவையும் இணைத்து பதிவிட்டுள்ளார். தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினமும் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|