Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவை மாவட்டத்தில் 20 ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை

கோவை மாவட்டத்தில் 20 ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை

By: Nagaraj Thu, 13 July 2023 11:12:17 AM

கோவை மாவட்டத்தில் 20 ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை

கோவை: கோவை மாவட்டத்தில் 20 ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை துவங்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் 1,400க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இதில் கூட்டுறவு துறை மூலம் 1000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கூட்டுறவு துறை மூலம் மாவட்டத்தில் 10 இடங்களில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

tomato sales,farmers market,ration shops,coimbatore ,
தக்காளி விற்பனை, உழவர் சந்தை, ரேஷன் கடைகள், கோவை

நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் தக்காளி விலையை குறைக்க கூட்டுறவு துறை மூலம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் முதல் கட்டமாக குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் தக்காளிகளை விற்பனை செய்ய திட்டமிட்டு சென்னை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் உழவர் சந்தைகளிலும் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Tags :