Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 20 ஆயிரத்து 706 பேர் கொரோனா வைரஸ் சிகிச்சையில் உள்ளனர்!

தமிழகத்தில் 20 ஆயிரத்து 706 பேர் கொரோனா வைரஸ் சிகிச்சையில் உள்ளனர்!

By: Monisha Wed, 17 June 2020 12:17:47 PM

தமிழகத்தில் 20 ஆயிரத்து 706 பேர் கொரோனா வைரஸ் சிகிச்சையில் உள்ளனர்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் அடங்குவர்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 528 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், மருத்துவத்துறையினரின் சேவையால் நேற்று ஒரே நாளில் 1,438 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 20 ஆயிரத்து 706 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

india,coronavirus,tamil nadu,treatment,discharge ,இந்தியா,கொரோனா வைரஸ்,தமிழ்நாடு,சிகிச்சை,டிஸ்சார்ஜ்

மேலும் உள்நாட்டு விமானத்தில் வந்த 64 பேர் விமான நிலைய கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். சர்வதேச விமானம் மூலம் வெளிநாட்டில் இருந்து வந்த 132 பேர் விமானநிலைய கண்காணிப்பில் உள்ளனர். ரயில் மூலம் பிற மாநிலங்களில் இருந்து வந்த 177 பேர் ரெயில் நிலைய கண்காணிப்பில் உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முதல் 10 மாவட்டங்களின் விவரம் வருமாறு:-

சென்னை - 15,257
செங்கல்பட்டு - 1,576
திருவள்ளூர் - 1,001
காஞ்சிபுரம் - 355
திருவண்ணாமலை - 305
ராணிப்பேட்டை - 196
மதுரை - 158
தூத்துக்குடி - 129
திருநெல்வேலி - 127
வேலூர் - 120

Tags :
|