Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சூடானில் ராணுவம் – துணை ராணுவம் மோதலில் பொதுமக்கள் 200 பேர் பலி

சூடானில் ராணுவம் – துணை ராணுவம் மோதலில் பொதுமக்கள் 200 பேர் பலி

By: Nagaraj Tue, 18 Apr 2023 7:51:38 PM

சூடானில் ராணுவம் – துணை ராணுவம் மோதலில் பொதுமக்கள் 200 பேர் பலி

சூடான்: அப்பாவி பொதுமக்கள் பலி... சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில், அப்பாவிப் பொதுமக்கள் 200 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

இதுதவிர 1800-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இருதரப்பினர் மோதலில் மருத்துவமனைகள் சேதமடைந்து இருப்பதாலும், போதிய மருத்துவ உபகரணங்களோ, மருந்துகளோ இல்லாததாலும் சிகிச்சை பெற முடியாமல் நூற்றுக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.

army division,sudan,indians,external affairs,ministry,call ,
ராணுவப்பிரிவு, சூடான், இந்தியர்கள், வெளியுறவு, அமைச்சகம், அழைப்பு

இந்தநிலையில், சூடானில் உள்ள இந்தியர்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை ஒன்று வெளியுறவு அமைச்சகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

சூடானில் அமைதியை நிலை நாட்ட அனைவரும் முன்வர வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் குட்ரஸ் கேட்டுக்கொண்டுள்ளார். மோதலில் ஈடுபட்டுள்ள இரு ராணுவப் பிரிவினரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags :
|