Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு இன்று முதல் கூடுதலாக 200 பேருந்துகள் இயக்கம்

சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு இன்று முதல் கூடுதலாக 200 பேருந்துகள் இயக்கம்

By: vaithegi Fri, 04 Aug 2023 09:35:06 AM

சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு இன்று முதல் கூடுதலாக 200 பேருந்துகள் இயக்கம்

சென்னை: இன்று முதல் கூடுதலாக 200 பேருந்துகள் இயக்கம் ... தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைக்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வெளியூர்களில் தங்கி பயன்பெற்று கொண்டு வருகின்றனர்.இதையடுத்து வார இறுதி நாட்களில் சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

அதேபோன்று பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பயணிகள் சிரமமின்றி செல்வதற்காக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக 200 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்தது.

buses,chennai,transport corporation ,பேருந்துகள் ,சென்னை, போக்குவரத்து கழகம்

எனவே அதன்படி கோவை, மதுரை, நெல்லை ,திருச்சி சேலம் போன்ற இடங்களில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் செல்லும் பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் வகையில் முன் பதிவு செய்து பயணிக்கவும் வசதி செய்யப்பட்டு உள்ளது.


Tags :
|