Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை முதல் அரசு பேருந்துகளில் 2000 நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது

நாளை முதல் அரசு பேருந்துகளில் 2000 நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது

By: vaithegi Mon, 22 May 2023 11:33:12 AM

நாளை முதல் அரசு பேருந்துகளில் 2000 நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது

சென்னை: இந்தியாவில் நாளை முதல் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், நாளை முதல் அரசு பேருந்துகளில் இந்த நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது என போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் அறிவிப்பு .... இந்தியாவில் கடந்த 2016 -ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.

மேலும், வருகிற மே 23-ம் தேதி முதல் அக்டோபர் 30-ம் தேதி வரைக்கும் வங்கி கிளைகளின் மூலமாக ரூபாய் 2000 நோட்டுகளை பொது மக்கள் மாற்றம் செய்து கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. ஆனால், பொதுமக்கள் நோட்டுகளை மாற்றம் செய்வதில் சிக்கல் இருக்குமோ என தவித்து கொண்டிருக்கின்றனர்.

2000 notes,government bus ,2000 நோட்டுகள் , அரசு பேருந்து

இந்த நிலையில், நெல்லை போக்குவரத்து கழக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி நாளை முதல் பயணிகளிடம் ரூபாய் 2000 நோட்டுகளை வசூல் செய்யப்பட வேண்டாம் என்றும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவர்களிடம் பக்குவமாக பேசி 2000 நோட்டுகளை தவிர்க்க வேண்டும் நடத்துனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் உள்ள ஆம்னி பேருந்துகளில் எவ்வித இடையூறும் இல்லாமல் பொதுமக்களிடம் ரூபாய் 2000 நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் சார்பில் அறிவிக்க

Tags :