Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுள்ள நிலையில் அது குறித்து அப்டேட் ஒன்று வெளியீடு

2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுள்ள நிலையில் அது குறித்து அப்டேட் ஒன்று வெளியீடு

By: vaithegi Sat, 12 Aug 2023 10:34:50 AM

2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுள்ள நிலையில் அது குறித்து அப்டேட் ஒன்று வெளியீடு

இந்தியா: இந்திய ரிசர்வ் வாங்கி சில மாதங்களுக்கு முன் தான் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் மாண்டேரி கொள்கையின் கடைசி நாளான நேற்று ரெப்போ விகிதம் அதிகரிக்கவில்லை என்ற அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர் 2000 ரூபாய் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளார். அதாவது 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவது பெரும் பலன் அளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

update,2000 rupee note,rbi ,அப்டேட் ,2000 ரூபாய் நோட்டு, ரிசர்வ் வங்கி


மேலும் அதுமட்டுமில்லாமல் இதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை 87 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ஜூலை 31 ஆம் தேதி வரை புழக்கத்தில் இருந்து வெளியேறிய ரூ.2000 நாடுகளின் மொத்த மதிப்பு ரூ.3.14 லட்சம் கோடி என்ற தகவலும் வெளியாகி இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|