Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநகரில் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தயுள்ளன

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநகரில் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தயுள்ளன

By: vaithegi Fri, 26 Aug 2022 11:10:14 AM

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநகரில் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தயுள்ளன

சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் வரும் 31-ம் தேதி வெகு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டு வருகிறது.

இதை அடுத்து விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது குறித்த வழிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது. அதில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் நீர் நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மூலப்பொருட்களால் ஆன விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

police,vinayagar chaturthi,chennai ,போலீசார் ,விநாயகர் சதுர்த்தி,சென்னை


சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்காக உலர்ந்த மலர்கள், வைக்கோல், மரங்களின் இயற்கை பிசினை ஆகியவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒருமுறை பயன்படுத்தும், தெர்மாகோலால் ஆன பொருட்களை அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன வர்ணங்களை பயன்படுத்த கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் காசிமேடு, பட்டினப்பாக்கம், எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் போன்ற இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநகரில் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல்.

Tags :
|