Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓராண்டாக நடக்கும் போரில் 20 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு... அமெரிக்கா தகவல்

ஓராண்டாக நடக்கும் போரில் 20 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு... அமெரிக்கா தகவல்

By: Nagaraj Tue, 02 May 2023 10:38:03 PM

ஓராண்டாக நடக்கும் போரில் 20 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு... அமெரிக்கா தகவல்

அமெரிக்கா: 20,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு... ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் 20,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைனின் பாக்முத் நகரில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மோதல் நீடித்து வருவதால், அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்யப் படைகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கர்பி தெரிவித்தார்.

20000 russian soldiers,america,death,information,russia,ukraine,war, ,அமெரிக்கா, உக்ரைன், தகவல், போர், மரணம், ரஷ்யா

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதல் நடத்தியது. உக்ரைன் எதிர் தாக்குதலுடன் களத்தில் நிற்கிறது. உக்ரைனின் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் போதிய பயிற்சி இல்லாமல் ராணுவ வீரர்களை போரிட ரஷ்யா அனுப்பியதால் கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பலத்த காயம் அடைந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கர்பி, உக்ரைனுக்கு மற்றொரு ஆயுத உதவி திட்டத்தை அறிவித்தார். உக்ரைன் தொடக்கம் முதலே ஆதரவு அளித்து வந்த அமெரிக்கா, மீண்டும் ஆயுதங்களை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.

Tags :
|
|
|