Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் 2084 பேர் கொரோனாவால் பாதிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் 2084 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Nagaraj Tue, 30 June 2020 09:38:54 AM

கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் 2084 பேர் கொரோனாவால் பாதிப்பு

டெல்லியில் ஒரே நாளில் 2,084 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தினம் தினம் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று வரை உள்ள ஊரடங்கை பல மாநிலங்கள் ஜுலை 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

delhi,healthcare,curfew,daily increase ,டெல்லி, சுகாதாரத்துறை, ஊரடங்கு, தினமும் அதிகரிப்பு

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஒரே நாளில் 2,084 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 85,161 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 56 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2680 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 56 ஆயிரத்தைக் கடந்துள்ளது என டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Tags :
|
|