Advertisement

வீடுகளுக்கு 20% மின்கட்டண உயர்வு பொருந்தாது

By: vaithegi Sun, 25 June 2023 1:56:48 PM

வீடுகளுக்கு 20% மின்கட்டண உயர்வு பொருந்தாது

சென்னை: தமிழ்நாடு மின்வாரியம் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருவதனால் தமிழகத்தில் மின் கட்டணத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும், தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்ததன் காரணத்தினால் மின் கட்டணம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அதிக அளவில் பொதுமக்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதனை கருத்தில் கொண்டு மின்வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதாவது, நேற்று வெளியான அறிவிப்பின்படி தமிழகத்தில் காலை மற்றும் மாலையில் தான் அதிக அளவிலான மின் தேவை ஏற்படுவதனால் காலை மற்றும் மாலை உபயோகிக்கும் மின் அளவிற்கு 20% கூடுதலாக மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

electricity tariff increase,electricity board ,மின்கட்டண உயர்வு ,மின்வாரியம்


மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பின்படி வீடுகளுக்கு இந்த 20% மின் கட்டண உயர்வு பொருந்தாது என்றும், நுகர்வோர்கள் பெருமளவில் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும், மின் பயன்பாடு அதிகமுள்ள காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கும் திட்டம் அடுத்தாண்டு முதல் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் மின்வாரியம் அறிவித்து இருக்கிறது.

Tags :