Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 21 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைன் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்

21 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைன் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்

By: Nagaraj Fri, 28 Aug 2020 4:58:44 PM

21 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைன் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்

21,000 மாணவர்கள் ஆன்லைன் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நோய்க்கு மத்தியில், கல்கரியில் பொதுப் பாடசாலை அமைப்பில் உள்ள ஆறு மாணவர்களில் ஒருவர், செப்டம்பர் மாதம் நேரில் பாடசாலைக்கு செல்வதை விட ஆன்லைன் கற்றலை மேற்கொள்கின்றனர்.

மார்ச் மாதத்தில் கொவிட்-19 முடக்கநிலை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்ட பின்னர், அடுத்த செவ்வாய்க்கிழமை மாணவர்கள், வகுப்புகளுக்குத் திரும்பத் தயாராகி வருகின்றனர்.

students,classrooms,security,educational activity ,மாணவர்கள், வகுப்பறைகள், பாதுகாப்பு, கல்வி நடவடிக்கை

சுமார் 16 முதல் 17 சதவீதம் மாணவர்கள் ஒன்லைன் கற்றலில் சேர்ந்துள்ளனர் என்று கல்கரி கல்வி சபை (சிபிஇ) தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த செப்டம்பரில் 21,000 மாணவர்கள் ஒன்லைன் கற்றல் மையத்தை நாடுவார்கள் என சிபிஇ தலைவர் மர்லின் டென்னிஸ் தெரிவித்துள்ளார். மீதமுள்ள மாணவர்கள், வகுப்பறைகள் மற்றும் மண்டபங்களில் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கல்வி நடவடிக்கைகளை தொடருவார்கள்.

Tags :