Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2109 பாலங்களில் ஆய்வு நடத்த மேற்கு வங்கம் மாநில அரசு முடிவு

2109 பாலங்களில் ஆய்வு நடத்த மேற்கு வங்கம் மாநில அரசு முடிவு

By: Nagaraj Thu, 03 Nov 2022 8:37:53 PM

2109 பாலங்களில் ஆய்வு நடத்த மேற்கு வங்கம் மாநில அரசு முடிவு

மேற்கு வங்கம்: பாலங்களில் ஆய்வு நடத்த முடிவு... மேற்கு வங்காளத்தில் உள்ள 2 ஆயிரத்து 109 பாலங்களில் ஆய்வு நடத்த அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

குஜராத் மோர்பி பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தையடுத்தே, மேற்கு வங்காளத்தில் உள்ள பாலங்களில் ஆய்வு நடத்த அந்தமாநில அரசு முடிவு செய்துள்ளது.

minister,bridges,survey,gujarat,state,environment ,அமைச்சர், பாலங்கள், ஆய்வு, குஜராத், மாநிலம், சூழல்

இதுதொடர்பாக மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் புலக் ராய், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்போது அவர், பாலங்களின் நிலையை ஆய்வு செய்து நவம்பர் இறுதிக்குள் தேவையான கண்காணிப்புளுடன் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தினார்.

மேலும் அவர், ஆய்வின்போது ஏதேனும் பாலங்களில் சிக்கல் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து அமைச்சர் புலக் ராய் கூறுகையில் குஜராத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்த்த பின்னர், மாநிலத்தில் உள்ள அனைத்து பாலங்களிலும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம் என்றும் நம்மால் அப்படி ஒரு சூழலில் மாட்டிக்கொள்ள வாய்ப்பு எடுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

Tags :
|
|