Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் புதிதாக 212 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் புதிதாக 212 பேர் பாதிப்பு

By: Monisha Wed, 02 Dec 2020 5:16:58 PM

செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் புதிதாக 212 பேர் பாதிப்பு

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. 3 மாவட்டங்களிலும் புதிதாக 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 86 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 675 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 46 ஆயிரத்து 408 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 715 ஆக உயர்ந்தது. 552 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

chengalpattu,tiruvallur,kanchipuram,corona virus,infection ,செங்கல்பட்டு,திருவள்ளூர்,காஞ்சீபுரம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 41 ஆயிரத்து 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 39 ஆயிரத்து 879 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 484 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 654 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 720 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 27 ஆயிரத்து 16 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 423 பேர் உயிரிழந்துள்ளனர். 281 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :