Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டில்லியில் கார்கில் போர் 21ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தல்

டில்லியில் கார்கில் போர் 21ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தல்

By: Nagaraj Sun, 26 July 2020 5:47:37 PM

டில்லியில் கார்கில் போர் 21ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தல்

இன்று கார்கில் போரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்ற 21 வது ஆண்டு நினைவு நாள்.

இதையடுத்து புதுடில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்பு இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக் மற்றும் மூன்று பாதுகாப்பு சேவைகளின் தலைவர்களும் கார்கில் போரின் தியாகிகளுக்கு இன்று அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் நரேந்திர மோடி “1999’ல் நம் தேசத்தை உறுதியுடன் பாதுகாத்த நம் ஆயுதப்படைகளின் தைரியத்தையும் உறுதியையும் நினைவு கூறுவதாக ட்வீட் செய்துள்ளார். இன்று தனது மான் கி பாத் அத்தியாயத்தில் இது குறித்து உரையாற்றியுள்ளார்.

21st anniversary,remembrance day,kargil war,leaders,tribute ,21ம் ஆண்டு, நினைவு நாள், கார்கில் போர், தலைவர்கள், புகழாஞ்சலி

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கார்கில் விஜய் திவாஸ் அச்சமற்ற உறுதிப்பாட்டின் சின்னம் மற்றும் நமது ஆயுதப்படைகளின் வீரத்தின் வெளிப்பாடு. பாரத மாதாவைப் பாதுகாக்க எதிரிகளை எதிர்த்துப் போராடி உயிரைக் கொடுத்த வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தேசம் என்றென்றும் நன்றியுள்ளதாக இருக்கிறது.” என புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதேபோல் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கார்கில் நினைவுதினம் குறித்து தன்னுடைய டுவிட்டரில் “கார்கில் விஜய் திவாஸ் இந்தியாவின் பெருமை, வீரம் மற்றும் உறுதியான தலைமையின் சின்னமாகும். அவர்களின் அடக்கமுடியாத தைரியத்துடன், கார்கிலின் அணுக முடியாத மலைகளிலிருந்து எதிரிகளை விரட்டியடித்து, மீண்டும் அங்கு மூவர்ணத்தை நிலைநாட்டிய வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். தாய்நாட்டைப் பாதுகாக்க அர்ப்பணித்துள்ள இந்தியாவின் ஹீரோக்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

ஜூலை 26, 1999 அன்று இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானை தோற்கடித்தபோது, ஆபரேஷன் விஜய்யில் பங்கேற்ற வீரர்களின் பெருமையையும் வீரத்தையும் மீண்டும் புதுப்பிக்க கார்கில் விஜய் திவாஸ் கொண்டாடப்படுகிறது.

Tags :