Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 222 கோடியே 51 லட்சம் பெண்கள் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்தில் பயணம்

222 கோடியே 51 லட்சம் பெண்கள் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்தில் பயணம்

By: vaithegi Thu, 12 Jan 2023 8:58:03 PM

222 கோடியே 51 லட்சம் பெண்கள் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்தில்   பயணம்

சென்னை: சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின்போது, விராலிமலையில் இருந்து துவரங்குறிச்சி வரை நகரப் பேருந்துகள் இயக்க அரசு ஆவணம் செய்யுமா? என கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் கேள்வி ஒன்றை] எழுப்பினார்.

இதனையடுத்து இதற்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், விராலிமலையில் இருந்து துவரங்குறிச்சி 32 கிலோ மீட்டர் எனவும் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழித்தடம் என்பதால் 5-10 நிமிடத்திற்கு புறநகர் பேருந்துகள் இயக்கப்படுவதோடு 3 நகர பேருந்துகளும் இயக்கப்படுவதாகவும், கூடுதல் பேருந்துகள் இயக்குவது பற்றி முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

travel,women,free bus for women ,பயணம் ,பெண்கள் ,பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து

மேலும், திமுக அரசு பொறுப்பேற்றப்பின், திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை மட்டும் 222 கோடியே 51 லட்சம் பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், தினசரி 40 லட்சம் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து அதேபோன்று, கொரோனா காலத்தில் நிறுத்தி வைத்த பேருந்துகள் இன்னும் இயக்கப்படாமல் இருந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Tags :
|
|