Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By: vaithegi Sun, 15 Oct 2023 10:26:45 AM

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்


சென்னை: போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :- ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வருகிற 20, 21, 22 ஆகிய தேதிகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் 3 மையங்களில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

எனவே இதன்படி, தாம்பரம் ‘மெப்ஸ்’ பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி புறவழிச் சாலை (பணிமனை அருகே) மற்றும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

special buses,ayutth puja festival ,சிறப்பு பேருந்துகள் ,ஆயுத பூஜை பண்டிகை

மேலும் தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் மேல் குறிப்பிடப்பட்ட 3 நாட்களில் கூடுதலாகச் சென்னையில் இருந்து 2,265 சிறப்புப் பேருந்துகளையும்,

இதனை அடுத்து பெங்களூரு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து பிறபகுதிகளுக்கு 1,700 சிறப்புப் பேருந்துகளையும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :