Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விண்வெளியில் பயன்படுத்த 23 மில்லியன் டாலர் மதிப்பில் கழிப்பறை

விண்வெளியில் பயன்படுத்த 23 மில்லியன் டாலர் மதிப்பில் கழிப்பறை

By: Nagaraj Mon, 05 Oct 2020 1:05:34 PM

விண்வெளியில் பயன்படுத்த 23 மில்லியன் டாலர் மதிப்பில் கழிப்பறை

விண்வெளியில் பயன்படுத்த 23 மில்லியன் டாலர் மதிப்பில் கழிப்பறையினைத் நாசா தயார் செய்துள்ளது.

நாசா விண்வெளி வீரர்களை நிலவில் பல மாதங்கள் தங்க வைத்து ஆராய்ச்சி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது, அதாவது 2024 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பி அவர்களை அங்கு தங்கவைத்து அதுகுறித்த ஆராய்ச்சியினை செய்ய உள்ளது.

நிலவில் மனிதர்களைத் தங்கவைக்கும் பொருட்டு, விண்வெளி செல்லவுள்ள வீரர்களுக்கு பல லட்சக் கணக்கில் செலவிட்டு அவர்களுக்கு முறையான பயிற்சியளித்து தயார் செய்து வருகிறது.

toilet,space,competition,gravity toilet,nasa ,கழிப்பறை, விண்வெளி, போட்டி, க்ராவிட்டி கழிவறை, நாசா

அதாவது நிலவில் தங்குதல், விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி என பல கோடிகளைச் செலவிட்டு வரும் நாசா தற்போது அங்கு தங்கவுள்ள வீரர்கள் பயன்படுத்த 23 மில்லியன் டாலர் மதிப்பில் கழிப்பறையினைத் தயார் செய்துள்ளது.

மேலும் இந்த திட்டத்தில் நிலவில் முதல் பெண்ணை தரையிறக்கவும் திட்டமிட்டுள்ளது நாசா. இதற்கு முன்னர் சந்திரனில் மனித கழிவுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு இருந்த சந்திர லூவிவை விட இது சிறப்பாக இருக்கும் என்று தெரிகிறது.

சமீபத்தில் 2024 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்ப உள்ள நிலையில் விண்வெளி கழிவறைகளை கண்டுபிடிக்க பரிசுப் போட்டியினை அறிவித்தது.

சந்திரனின் ஈர்ப்பு விசையில் உருவாக்கப்பட்ட இந்த கழிப்பறை ஜீரோ க்ராவிட்டி கழிவறை என்று அழைக்கப்படுகின்றது.

Tags :
|
|