Advertisement

ஜூலையில் 23.87 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்

By: vaithegi Fri, 02 Sept 2022 4:03:52 PM

ஜூலையில் 23.87 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்

இந்தியா: உலகம் முழுவதும் பொதுமக்கள் தங்களின் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு பல்வேறு வகையான செயலிகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் WhatsApp செயலி பயனாளர்களின் தரவுகளை பாதுகாப்பாக வைப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் இந்த செயலியை பில்லியன் கணக்கான பயனாளர்கள் பயன்படுத்துகின்றனர்.

இதை அடுத்து நாட்டின் இறையாண்மை மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கணக்குகளை முடக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதாவது நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றை பற்றி தவறுதலாக தகவல்களை பரப்புவர்களின் கணக்குகளுக்கு தடை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏனெனில் இதனால் இந்திய மக்களிடையே சமூக நல்லிணக்கம், ஒற்றுமை, ஒருமைப்பாடு போன்றவற்றிக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

whatsapp,july ,வாட்ஸ் ஆப்,ஜூலை

எனவே இதன் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் சமூக ஊடக நிறுவனங்கள் அறிக்கையை தாக்கல் செய்வது வழக்கமாகும். அதன்படி வாட்ஸ் ஆப்’ தகவல் தொடர்பு செயலி நிறுவனம் இது தொடர்பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், நாட்டில் குறைதீர்ப்பு குழுவிற்கு பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் மட்டும் 22 லட்சம் பேரின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் கடந்த ஜூலையில் 23.87 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதில் புகார் அளிக்கப்படுவதற்கு முன்பாக 14 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :