Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 2.48 லட்சம் பேர் குணம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 2.48 லட்சம் பேர் குணம்

By: Karunakaran Tue, 23 June 2020 1:17:36 PM

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 2.48 லட்சம் பேர் குணம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை அதிகரிப்பாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்றாலும், கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இந்தியாவில் இதுவரை 440215 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று மட்டும் 14933 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

coronavirus,india,corona recover,corona death ,இந்தியா,கொரோனா பாதிப்பு,கொரோனா வைரஸ், கொரோனா பலி

நேற்றுக்கு 213 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளதால், இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14011 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 248190 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்புடைய 178014 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டிலே கொரோனா பாதிப்பில் அதிகபட்சம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. மகாராஷ்டிராவில் 135796 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 62087 பேருக்கும், டெல்லியில் 62655 பேருக்கும், குஜராத்தில் 27825 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 12078 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags :
|