Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாவட்டத்திற்கு டிசம்பர் 24ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை

இந்த மாவட்டத்திற்கு டிசம்பர் 24ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை

By: vaithegi Wed, 21 Dec 2022 2:16:52 PM

இந்த மாவட்டத்திற்கு டிசம்பர் 24ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி : உள்ளூர் விடுமுறை .... தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் நன்கு சிறப்பிக்கப்படும் பண்டிகைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மட்டும் கொண்டாடப்படும் திருவிழாக்கள், பண்டிகைகள் ஸ்கியிஸ் தினங்களின் பொழுது உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு,இதையடுத்து அதற்கு ஈடாக வேறு நாளில் வேலை நாளாக அறிவிக்கப்படும்.

local holiday,kanyakumari , உள்ளூர் விடுமுறை,கன்னியாகுமரி

அந்த வகையில்,கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக அளவிலான கிறிஸ்தவ மதத்தை சார்ந்த மக்கள் வசிக்கின்றனர். மேலும், டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அதற்கு முந்தைய நாளான டிசம்பர் 24ம் தேதியான சனிக்கிழமை கிறிஸ்துமஸ் ஈவ் சிறப்பிக்கப்படுகிறது.

டிசம்பர் 24 சனிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அவ்ரஜால் உத்தரவிட்டுள்ளார்.இதனை அடுத்து இதற்கு பதிலாக பிப்ரவரி 11ம் தேதி வேலை நாளாக ஈடு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :