Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தர்மபுரி மாவட்டத்தில் அரசு பெண் டாக்டர் உட்பட 25 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

தர்மபுரி மாவட்டத்தில் அரசு பெண் டாக்டர் உட்பட 25 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

By: Monisha Sat, 22 Aug 2020 10:26:23 AM

தர்மபுரி மாவட்டத்தில் அரசு பெண் டாக்டர் உட்பட 25 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 67 ஆயிரத்து 430 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 7 ஆயிரத்து 677 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 340 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் 39 வயது பெண் டாக்டருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவரை தனிமைப்படுத்தி பரிசோதித்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

dharmapuri district,corona virus,infection,treatment,female doctor ,தர்மபுரி மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பெண் டாக்டர்

மேலும், தர்மபுரி இலக்கியம்பட்டியை சேர்ந்த 42 வயது துப்புரவு பணியாளர், புலிகரையை சேர்ந்த 29 வயது பெண் வங்கி ஊழியர், மாரண்டஅள்ளியை சேர்ந்த 29 வயது நிதி நிறுவன ஊழியர், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் 35 வயது டிரைவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மகேந்திரமங்கலத்தை சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி, 24 வயது கல்லூரி மாணவர், 53 வயது போலீஸ்காரர் உள்பட 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இவர்கள் அனைவரும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,089 ஆக உயர்ந்து உள்ளது.

Tags :