Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்புளூயென்சா வைரஸ் எதிரொலி ... காய்ச்சல் மருந்துகள் விற்பனை 25 சதவிகிதம் உயர்வு

இன்புளூயென்சா வைரஸ் எதிரொலி ... காய்ச்சல் மருந்துகள் விற்பனை 25 சதவிகிதம் உயர்வு

By: vaithegi Wed, 08 Mar 2023 6:48:31 PM

இன்புளூயென்சா வைரஸ் எதிரொலி   ...   காய்ச்சல் மருந்துகள் விற்பனை 25 சதவிகிதம் உயர்வு

சென்னை: இந்தியாவில் தற்போது பருவ நிலை மாற்றம் காரணமாக இன்புளூயென்சா வைரஸ் அதிகமாக பரவி கொண்டு வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 நாட்கள் காய்ச்சல் இருக்கும். மேலும் இக்காய்ச்சலை எளிமையாக குணப்படுத்திவிடலாம். மேலும் புளூ காய்ச்சல் நேரடியாக நுரையீரலை தாக்கக் கூடியது.

இதனால் சளி, உடல் வலி, இருமல், தலைவலி, தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த வைரஸ் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிக்க கூடியது. இதையடுத்து இந் நோய் பாதித்த குழந்தைகள் நிமோனியா எனப்படும் உடலில் நீர் இழப்பு மற்றும் நீர் பற்றாக்குறை அதிகமாக ஏற்பட்டாலோ காய்ச்சல் அதிகமாக வந்தாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

drugs,virus ,மருந்துகள் ,வைரஸ்

எனவே இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் இருமல் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் தொற்று எதிர்ப்பு மருந்துகளின் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. இந்த மருந்துகளின் விற்பனை பிப்ரவரி மாதம் 20 முதல் 25 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.

அதே போன்று காய்ச்சல் மருந்தான பாராசிட்டமால், அசித்ரோமைசின் மற்றும் இருமல் டானிக் விலை அதிகரித்துள்ளது. நோய் தொற்று எதிர்ப்பு மருந்து விற்பனை 12.5 சதவீகிதம் அதிகரித்து ரூ. 22,883கோடியாக இருக்கிறது. அதே போன்று சுவாச மருந்துகள் கடந்த மாதம் 8.1 சதவிகிதம் உயர்ந்து ரூ. 14,880 கோடியாக இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி மருந்து விற்பனை 26.1 சதவிகிதம் உயர்ந்து ரூ. 2,766 கோடியாக இருக்கிறது.

Tags :
|