Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Mon, 15 June 2020 5:45:08 PM

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 80 லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4.35 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் சுமார் 20,93,508 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,15,732 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

usa,coronavirus,florida,texas,alabama ,அமெரிக்கா,கொரோனா வைரஸ்,புளோரிடா,டெக்சாஸ்,அலபாமா

அமெரிக்காவின் புளோரிடா மற்றும் டெக்சாஸ் போன்ற மாகாணங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே போன்று அலபாமா மாகாணத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் சேர்க்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த போராட்டங்கள் மற்றும் நினைவுக்கூட்டங்கள் காரணமாக மீண்டும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

Tags :
|
|