Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து ... இதுவரை, 258.06 கோடி பயணங்கள்

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து ... இதுவரை, 258.06 கோடி பயணங்கள்

By: vaithegi Wed, 29 Mar 2023 12:34:51 PM

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து   ...   இதுவரை, 258.06 கோடி பயணங்கள்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகர பேருந்துகளில் 7,164 சாதாரண நகர பேருந்துகள் மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகிறது என்று அமைச்சர் சிவசங்கர் தகவல்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில், பெண்களுக்கு கட்டணமில்லா இலவச பேருந்து சேவை அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். எனவே அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மகளிருக்கான இலவச பேருந்து சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

trips,free bus ,பயணங்கள்,கட்டணமில்லா பேருந்து

எனவே இதன் பல மூலம் இன்று பல பெண்கள் பயனடைந்து கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து இதுகுறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் தகவல் அளித்துள்ளார். அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகர பேருந்துகளில் 7,164 சாதாரண நகர பேருந்துகள் மகளிருக்கான கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகிறது.

மேலும் இதன்மூலம் இதுவரை மட்டும் 258.06 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது துணையர்களால் 2.05 கோடி கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|