Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜூலை 25 & 26ல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜூலை 25 & 26ல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

By: vaithegi Fri, 22 July 2022 6:11:06 PM

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜூலை 25 & 26ல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வான கன்வர் யாத்திரை கடந்த ஜூலை 14 ஆம் தேதி முதல் துவங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மிகவும் வெகு விமர்சையாக நடைபெறும் இந்த கன்வர் யாத்திரை கடந்த 2 ஆண்டுகளுமே கொரோனா பரவலினால் நடைபெறவில்லை. தற்போது ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்ததும்

மேலும் இந்த ஆண்டு கோலாகலமாக கன்வர் யாத்திரை நடைபெற்று கொண்டிருக்கிறது. அதாவது, இந்த யாத்திரையின் போது லட்சக்கணக்கான சிவ பக்தர்கள் ஹரித்வார், கௌமுக் மற்றும் உத்தரகாண்டில் உள்ள கங்கோத்ரி மற்றும் பீகாரில் உள்ள சுல்தாங்கஞ்ச் ஆகிய பகுதிகளில் இருந்து கங்கை நீரை எடுத்து வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.

holiday,uttarakhand ,விடுமுறை ,உத்தரகாண்ட்

தற்போதே லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையில் கலந்துகொண்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மேலும், இந்த யாத்திரையில் கிட்டத்தட்ட 5 கோடிக்கும் அதிகமான சிவபக்தர்கள் கலந்துகொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 15 நாட்கள் நடைபெறும்

இதனால் யாத்திரையின் காரணமாக சில சாலைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், தெருக்களில் கூட்டம் மற்றும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு அனைத்து கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், ஐடிஐக்கள், 05 கிலோமீட்டர் சுற்றளவில் இயங்கும் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் ICSE, CBSE வாரியத்தால் நடத்தப்படும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களுக்கு வரும் ஜூலை 25 மற்றும் ஜூலை 26 ஆகிய 2 நாட்கள் விடுமுறை என்று அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :