Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.6 லட்சம் கொரோனா பரிசோதனை; ஐசிஎம்ஆர் மூத்த விஞ்ஞானி தகவல்

இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.6 லட்சம் கொரோனா பரிசோதனை; ஐசிஎம்ஆர் மூத்த விஞ்ஞானி தகவல்

By: Nagaraj Thu, 09 July 2020 8:29:10 PM

இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.6 லட்சம் கொரோனா பரிசோதனை; ஐசிஎம்ஆர் மூத்த விஞ்ஞானி தகவல்

ஒரு நாளைக்கு 2.6 லட்சம் பரிசோதனை... இந்தியாவில் ஒருநாளைக்கு 2.6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

டில்லியில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த ஐசிஎம்ஆர் மூத்த விஞ்ஞானி நிவேதிதா குப்தா தெரிவித்ததாவது:

"கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒருநாளைக்கு 2.6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன. ஆண்டிஜென் பரிசோதனை பயன்பாட்டின் மூலம் பரிசோதனைகள் மேலும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்கிறோம். கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை ஐசிஎம்ஆர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ரேபிட் ஆண்டிஜென் பரிசோதனைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

corona,vulnerability,population,india,10 lakhs ,கொரோனா, பாதிப்பு, மக்கள் தொகை, இந்தியா, 10 லட்சம்

இந்தியாவில் தற்போது 1,132 பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் ராஜேஷ் பூஷண் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஒவ்வொரு 10 லட்சம் மக்கள் தொகையில் ஏற்பட்டிருக்கும் கொரோனா பாதிப்பு என்ற கணக்கீட்டில், இந்தியா மற்ற நாடுகளைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது.

உலக சுகாதார அமைப்பின்படி, இந்தியாவில் ஒவ்வொரு 10 லட்சம் மக்கள் தொகையில் சராசரியாக 538 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இதுவே சில நாடுகளில் இந்தியாவைக் காட்டிலும் 16-17 மடங்கு அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|