கடந்த 24 மணி நேரத்தில் கனடாவில் கொரோனாவால் 26 பேர் பலி
By: Nagaraj Sat, 24 Oct 2020 3:11:24 PM
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் இரண்டாயிரத்து 584பேர் பாதிக்கப்பட்டதோடு, 26பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை இரண்டு இலட்சத்து பதினொராயிரத்து 732பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 888பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 23ஆயிரத்து 965பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 77ஆயிரத்து 879பேர் பூரண குணமடைந்து வீடு
திரும்பியுள்ளனர்.
இதில் 215பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags :
hospital |
circles |