Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 26 சதவீதம்பேர் கொரோனா தடுப்பூசி கிடைத்தாலும் அதை போட்டுக்கொள்ள விரும்பவில்லை என கருத்து

26 சதவீதம்பேர் கொரோனா தடுப்பூசி கிடைத்தாலும் அதை போட்டுக்கொள்ள விரும்பவில்லை என கருத்து

By: Karunakaran Wed, 02 Sept 2020 6:44:28 PM

26 சதவீதம்பேர் கொரோனா தடுப்பூசி கிடைத்தாலும் அதை போட்டுக்கொள்ள விரும்பவில்லை என கருத்து

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஜெனீவாவில் செயல்பட்டு வரும் உலக பொருளாதார கூட்டமைப்பும், இப்சோஸ் என்ற சந்தை ஆய்வு நிறுவனமும் இணைந்து, கொரோனா தடுப்பூசி குறித்து கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.

கடந்த ஜூலை 24-ந்தேதியில் இருந்து ஆகஸ்டு 7-ந்தேதிவரை அமெரிக்கா, இத்தாலி உள்பட 27 நாடுகளில் மொத்தம் 20 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், 74 சதவீதம்பேர், தங்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்தால் போட்டுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

26 percent,corona vaccine,corona virus,corona prevention ,26 சதவீதம், கொரோனா தடுப்பூசி, கொரோனா வைரஸ், கொரோனா தடுப்பு

26 சதவீதம்பேர் கொரோனா தடுப்பூசி கிடைத்தாலும் அதை போட்டுக்கொள்ள விரும்பவில்லை என இந்த ஆய்வில் தெரிவித்தனர். பக்க விளைவுகள் ஏற்படுமோ, அதன் செயல்திறன் எப்படி இருக்குமோ என்ற அச்சம் காரணமாகவே அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பவில்லை. இந்தியாவை பொறுத்தவரை, 13 சதவீதத்துக்கும் குறைவானவர்களே இப்படி கூறினர்.

59 சதவீதம் பேர் இந்த ஆண்டு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வராது என்று தெரிவித்தனர். ஆனால், சீனா, சவூதி அரேபியா, இந்தியா போன்ற நாடுகளில் அதிகமானோர் இந்த ஆண்டே தடுப்பூசி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நம்பகத்தன்மையை பொதுமக்களிடையே அதிகரிக்க அரசு-தனியார்-ஆராய்ச்சியாளர்கள்-உற்பத்தியாளர்கள் இடையே ஒத்துழைப்பு நிலவ வேண்டும் என அர்னாட் பெர்னார்ட் கூறியுள்ளார்.

Tags :