Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குறுவை சாகுபடிக்காக குஜராத்தில் இருந்து 2627 டன் யூரியா தஞ்சை வந்தது

குறுவை சாகுபடிக்காக குஜராத்தில் இருந்து 2627 டன் யூரியா தஞ்சை வந்தது

By: Nagaraj Mon, 05 June 2023 10:14:00 AM

குறுவை சாகுபடிக்காக குஜராத்தில் இருந்து 2627 டன் யூரியா தஞ்சை வந்தது

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக குஜராத்தில் இருந்து 2627 டன் யூரியா தஞ்சை வந்தது.

தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து உர மூட்டைகள் லாரியில் ஏற்றப்பட்டு தஞ்சை, திருவாரூர், நாகை மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

urea,came,gujarat,tanjore district,water ,யூரியா, வந்தது, குஜராத், தஞ்சை மாவட்டம், தண்ணீர்

இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். தற்போது டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான 2,627 டன் யூரியா உரம் குஜராத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் நேற்று தஞ்சைக்கு வந்தது.

42 வேகன்களில் வந்த இந்த உரங்கள் தஞ்சையில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையம் மற்றும் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags :
|
|