Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் 2,64,264 இடங்கள்; அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தகவல்

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் 2,64,264 இடங்கள்; அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தகவல்

By: Monisha Tue, 28 July 2020 3:10:51 PM

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் 2,64,264 இடங்கள்; அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தகவல்

தமிழகத்தில் உள்ள 500 பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் கடந்த வாரத்தில் வெளியாகியது. இதனையடுத்து கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த வருடம் குறிப்பாக பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் அதிகளவில் சேர்ந்து வருகின்றனர்.

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ஆன்-லைன் பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், அவற்றில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு வெளியிட்டுள்ளது.

tamil nadu,engineering,aicte,consultation,online registration ,தமிழ்நாடு,பொறியியல் கல்லூரி,அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு,கலந்தாய்வு,ஆன்லைன் பதிவு

இதன்படி, தமிழகத்தில் உள்ள 500 பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சத்து 64 ஆயிரத்து 264 இடங்களில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை பொறியியல் படிப்புகளை வழங்கும் 357 கல்லூரிகளில், மொத்தம் 30 ஆயிரத்து 306 இடங்கள் இருப்பதாக அந்த கல்விக் குழு அறிவித்துள்ளது.

இளநிலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளில் மொத்தமாக, 2 லட்சத்து 94ஆயிரத்து 570 இடங்கள் உள்ளதாக கூறியுள்ளது. பொறியியல் கலந்தாய்வை செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|