Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 266 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 266 பேருக்கு கொரோனா தொற்று

By: vaithegi Fri, 10 Mar 2023 11:22:00 AM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 266 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியா: உலகம் முழுவதும் 681,212,510 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,809,882 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 654,132,455 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,270,173 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

இந்தநிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 266 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3294 ஆக பதிவாகியுள்ளது.

corona,union ministry of health ,கொரோனா ,மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,779 ஆக உள்ளது.இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,55,439ஆக பதிவாகியுள்ளது.

இதனை அடுத்து நாடு முழுவதும் இதுவரை 220,64,41,230 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 7,230 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Tags :
|