Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவில் சிக்கி தவித்த 266 இலங்கையர்கள் இன்று தாயகம் திரும்பினர்

ரஷ்யாவில் சிக்கி தவித்த 266 இலங்கையர்கள் இன்று தாயகம் திரும்பினர்

By: Nagaraj Fri, 10 July 2020 7:28:27 PM

ரஷ்யாவில் சிக்கி தவித்த 266 இலங்கையர்கள் இன்று தாயகம் திரும்பினர்

பயணத்தடையால் ரஷ்யாவில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 266 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தாயகம் வந்து சேர்ந்தனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நாடுகளும் ஊரடங்கை பிறப்பித்துள்ளன. மேலும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கல்வி, தொழில், வேலை என்று பல்வேறு காரணங்களால் வெளிநாட்டில் தங்கியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

அவர்களை மீட்கும் பொருட்டு சிறப்பு விமானங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரஷ்யாவில் சிக்கி தவித்த 266 இலங்கையர்கள் இன்று காலை சிறப்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

sri lankans,japan,russia,special plane,homeland ,இலங்கையர்கள், ஜப்பான், ரஷ்யா, சிறப்பு விமானம், தாயகம்

இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும், பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவில் இருந்து நாட்டை வந்தடைந்தவர்களில் பெரும்பாலோர், உயர்கல்விக்காக சென்ற இலங்கை மாணவர்களாவர்.

இதேவேளை ஜப்பானில் இருந்தும் 5 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|