Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரியலூர் மாவட்டத்தில் ஜூலை 26ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை

அரியலூர் மாவட்டத்தில் ஜூலை 26ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை

By: vaithegi Wed, 20 July 2022 12:57:42 PM

அரியலூர் மாவட்டத்தில்  ஜூலை 26ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை

அரியலூர் : தமிழகத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவில், நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் நிகழ்வுமிக கோலாகலமாக கொண்டாடபடுகிறது. இதை தொடர்ந்து அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ள கங்கை கொண்ட சோழபுரத்தின் பிரகதீஸ்வரர் கோவிலில் ஆடி திருவாதிரை விழா கடைபிடிக்கப்பட உள்ளது.

அதன்படி , அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவானது சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை மூலமாக அரசு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

local holiday,ariyalur , உள்ளூர் விடுமுறை,அரியலூர்

இதனால் இந்த விழாவை முன்னிட்டு வரும் ஜூலை 26ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், ‘மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பிரகதீஸ்வரர் கோவிலில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

மேலும் அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் இந்த விடுமுறை நாளில் மூடப்படும். ஆனால், இந்த உள்ளூர் விடுமுறையானது மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு பொருந்தாது. இப்போது, உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு ஆகஸ்டு மாதம் 6ம் தேதி சனிக்கிழமை முழு வேலை நாளாக செயல்படும். மேலும் உள்ளூர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்கள், மாவட்ட கருவூலங்கள் அனைத்தும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :